போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் முக்கிய தகவல்
ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-2020 க்கு இடையில் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற சுமார் 180,000 ஊழியர்கள் இருப்பதாகவும், அவர்கள் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் அடிப்படையில் பாரிய ஓய்வூதிய வேறுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் மிகக் கவனமாக ஆராய்ந்து, முரண்பாட்டைக் களைவதற்கு நிரந்தரமான மற்றும் விரைவான தீர்வுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் உதய சேனவிரத்ன தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு வேதன முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான தீர்வுகளை காண உண்மைகளை ஆராய்ந்து அதற்கான நிரந்தர தீர்வுகளை வழங்க முடியும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.