நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியின் முழு ஆதரவும் இவருக்கே? கசிந்த தகவல்
ஜனாதிபதி தேர்தலுக்காக அதிக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தகவல் தற்போது கசிந்துள்ளது.
இதன்படி, மொட்டுக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தொழிலதிபரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவிற்கு ஆதரவு வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தம்மிக்க பெரேராவிற்கு ஆதரவு வழங்க மொட்டுக் கட்சி தீர்மானித்துள்ளதாக ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவரும், ராஜபஷ குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கான தீர்மானம் கட்சியின் ஸ்தாபகர் பஷில் ராஜபஷ்வினால் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானம் (29-07-2024) அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை முறையாக நடத்தி செல்வதற்கு கட்சி என்ற விதத்தில் மொட்டு கட்சி தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என அவர் கூறுகின்றார்.