ஜனாதிபதி தேர்தல்… டிக்டொக் வீடியோக்களுக்காக பெரும் தொகையை செலவு செய்த ரணில்!
நடந்து முடிந்த 9 அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில், முகநூலில் விளம்பரம் செய்வதற்காக இலங்கையில் உள்ள பல அரசியல் கட்சிகள் இலங்கை மதிப்பில் கிட்டதட்ட 42 கோடி ரூபா செலவு (இந்திய மதிப்பில் ரூ.11.57 கோடி) செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மெட்டா ஆட் லைப்ரரி அமைப்பின் தரவுகளில் இருந்து மேற்கோள் காட்டி இலங்கை செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதேபோன்று, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, டிக்டொக் வீடியோக்களுக்காக பெரிய அளவிலான தொகையை செலவு செய்திருக்கிறார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.