நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
நான் இருக்கும் வரை ரணிலை வெற்றிபெற விடமாட்டேன்! தொலைபேசியில் அழைப்பை எடுத்த மர்ம நபர்
மொட்டுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் அமைச்சர்கள் குழுவில் அங்கம் வகிக்கும் சிலர் நேற்றிரவு (29-07-2024) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பானது, கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவின் அரசியல் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், கலந்துகொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணிலைச் சந்திக்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மொட்டுக் கட்சியின் பலமான ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் அல்லது அநுர யார் வெற்றி பெற்றாலும் நான் இருக்கும் வரை, ரணிலை வெற்றிபெற அனுமதிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.