நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
பல நாடுகளின் தூவர்களை சந்தித்த பிரதமர் ஹரிணி
இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் பல நாடுகளின் தூதுவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இன்று (28) இடம்பெற்றது.
ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், எகிப்து தூதுவர் அடில் இப்ராகிம், ஈரான் தூதர் டாக்டர் அலிரிஷா டெல்கோஷ், ஜப்பான் தூதர் இசமோட்டா அகிரோ, வத்திக்கான் தூதுவர் மேதகு பிஷப் பிரையன் உதய்க்வே ஆகியோர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடினர்.
மேலும் இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் தூதரகங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகள், இலங்கை அரச அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.