நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
பிரதமர் ஹரிணி தொடர்பில் அவதூறு காணொளி; பொலிஸில் முறைப்பாடு!
பிரதமர் ஹரிணி அமரசூரிய , தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பிர்தௌஸ் நளீமி, காத்தான்குடியின் பிரமுகர்கள் சிலர் தொடர்பாகவும் வெளியிடப்பட்ட வீடியோ பதிவு தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிர்தௌஸ் நளீமியினால் செவ்வாய்க்கிழமை(12) இரவு காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வீடியோவை தயாரித்தவர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியவர்கள், பகிர்ந்தவர்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், தனது சட்டத்தரணிகள் ஊடாக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பிர்தௌஸ் நளீமி தெரிவித்துள்ளார்.