போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மட்டக்களப்பில் இடமாற்றம் செய்யப்படும் அரச அதிகாரிகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேவை புரியும் சுமார் 34 சமுர்த்தி ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து உடனடியாக நடவடிக்கையினை மேற்கொண்டு அனைத்து அலுவலர்களின் இடமாற்றம் நிறுத்தப்பட்டதற்காக முகநூல் பதிவில் வினோராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரியவருகையில்,அண்மையில், மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களை மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
சுமார் 34 சமூர்த்தி அலுவலர்களுக்கான இடமாற்றம் வழங்கப்படுள்ளது இவ் இடமாற்றத்தை உடனடியாக இரத்து செய்யும்படி கேட்டிருந்தேன்.அந்தவகையில் ஐனாதிபதியவர்கள் உடனடியாக நடவடிக்கையினை மேற்கொண்டு அனைத்து அலுவலர்களின் இடமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஐனாதிபதி மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன் என அவர் பதவில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, மாவட்டத்தின் பல விடயங்கள் தொடர்பில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் அறிவித்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேவை புரியும் சுமார் 34 சமுர்த்தி ஊழியர்களின் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள், என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.