உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
அமெரிக்காவின் தீர்வை வரி விதிப்பு குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை

இலங்கைத் தூதுக்குழு, வொஷிங்டன் டிசியில் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயரை 22.04.2025 அன்று சந்தித்து கலந்துரையாடியது. அமெரிக்காவின் தீர்வை வரி விதிப்பு தொடர்பான கடிதங்களின் நகல்களை நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அறிவுறுத்தலின் கீழ் தூதுக்குழு சமர்ப்பித்தது.
இந்நிகழ்வில், இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பொருளாதாரத்தை மீளுமுறையாக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. வர்த்தக பற்றாக்குறை குறைப்பது, தீர்வை வரி மற்றும் தீர்வை அற்ற தடைகளை நீக்கும் முயற்சிகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
தூதுவர் கிரீயர், இலங்கையின் முன்மொழிவுகளை வரவேற்றதோடு, இருநாடுகளுக்கும் இடையில் விரைவில் பக்கச்சார்பற்ற மற்றும் நியாயமான வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள நம்பிக்கை தெரிவித்தார். இதற்காக, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கு பொறுப்பான அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழுவுடனும் இலங்கை தூதுக்குழு கலந்துரையாடியுள்ளது.