துயர செய்தி – திருமதி லோகநாயகி பரமேஸ்வரன்

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட லோகநாயகி பரமேஸ்வரன் அவர்கள் 01-02-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி மயில்வாகனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பரமேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,சொர்ணாம்பிகை, யோகசோதி, காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சம்பந்தன், பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ராஜ்குமார், நந்தகுமார், விஜயகுமார், பிரேம்குமார், மீனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,நவீனா, ஜானகி, ஹமீமா, கஜேந்தினி, குகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,அர்ஜீன், அஸ்வினி, விதுசன், தலன், சங்கவி, சரண்யா, அலிஷா, சந்தியா, சஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.