ஏன் இறைவழிபாட்டின் பொழுது கண்ணீர் வருகிறது?
இறைவழிபாட்டில் பலரும் பல விதமான அனுபவங்களை சந்திப்பது உண்டு.அதில் சிலருக்கு கண்ணீர் வருவதையும் சிலருக்கு கொட்டாவி வருவதையும் நாம் இயல்பாக பார்க்க முடியும்.அதே போல் இன்னும் சிலருக்கு சாமி கும்பிடும் பொழுது பூ கீழே விழுவது,வேண்டுதல் முடித்த உடன் மணியோசை கேட்பது போன்ற நிகழ்வுகள் நடக்கும்.
இவை எல்லாம் சாதாரணமாக நடக்கும் தருணம் இல்லை.இதற்கு பின்னால் சில காரணங்கள் இருக்கிறது அதை பற்றி பார்ப்போம்.
கடவுளிடம் மனிதன் மிக உருக்கமாக வழிபாடு செய்வது உண்டு.ஆனால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இறை வழிபாடு மேற்கொள்வது தான் உண்மையான பக்தி.அப்படி இறை வழிபாட்டில் ஈடுபடும் பொழுது கண்ணீல் கண்ணீர் வருவதை தடுக்க முடியாது.
அந்த நொடியில் நாம் அழவில்லை.ஆனால் தானாக கண்களில் கண்ணீர் கசிவதை நாம் பார்க்க முடியும்.அதன் பெயர் தான் உணர்வுகள்.இவை நமக்கும் இறைவனுக்கும் உள்ள இணக்கத்தை வெளிப்படுத்துகிறது.அது தான் கோடி விலை கொடுத்தாலும் கிடைக்காத ஆனந்த கண்ணீர்.
அதே போல்,இன்னும் சிலருக்கு வழிபாட்டின் பொழுது நிறுத்த முடியாத கொட்டாவி வந்து கொண்டே இருக்கும்.இவ்வாறு வருவது அந்த நபர் மிகுந்த மனஉளைச்சல் இருப்பதை குறிக்கிறது.அவர்கள் மனதில் தீராத மனக்கவலைகள்,வெளியே சொல்லாத பிரச்சனைகள் போன்ற நிகழ்வுகளால் அவர்களுக்கு இறைவன் முன் நின்றவுடன் அவர்களுக்கு கொட்டாவியாக வருகிறது.
அதே போல் நாம் இறைவனிடம் சில வேண்டுதல் வைக்கும் பொழுது சிலையில் இருந்து பூ விழுவதை பார்க்க முடியும்.அவ்வாறு விழுவது நல்ல சகுனமாக பார்க்க படுகிறது.அதாவது சாமி சிலையின் வலது பக்கத்தில் இருக்கும் பூ கீழே விழுந்தால், நாம் வேண்டிக்கொண்டது சீக்கிரமே நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
அதே போல் சாமியின் இடது பக்கத்தில் இருக்கும் பூ விழுந்தால், நம்முடைய வேண்டுதல் நிறைவேறும். ஆனால், கால தாமதம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இதுவே சாமிக்கு நேரே இருக்கும் பூ கீழே விழுந்தால், நம்முடைய முயற்சி அதிகமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.
அதே போல் நாம் இறைவனிடம் மனம் உருகி ஒரு வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று பிராத்தனை செய்யும் பொழுது வேண்டுதல் வைத்து முடித்த நொடியில் மணி ஓசை கேட்கும்.அப்பொழுது பலருக்கும் மனதில் உற்ச்சாகம் உருவாகும்.
இறைவன் நம்முடைய வேண்டுதலை ஏற்று கொண்டார் என்று.உண்மையில் அவ்வாறு நடக்கும் நிகழ்வுகளும் நல்ல சகுனமாக பார்க்க படுகிறது.
ஆக இந்த பிரபஞ்சம் நமக்கான விடையை எப்பொழுது மறைமுகமாக கொடுத்து கொண்டு இருக்கிறது.அதை நாம் சரியாக கவனித்தால் உணர்ந்தால் இறைவனை முழுமையாக சரண் அடைய முடியும்