நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
குலம் காக்க நாக பஞ்சமி வழிபாடு எப்படி செய்வது
இந்துக்களின் வழிபாட்டு முறையில் நாக தெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமானதாகும். அதன் வழிபாட்டு முறை இந்த வருடம் எப்போது நாக பஞ்சமி வருகின்றது என நாம் இப்பதிவில் பார்ப்போம்.
நாக பஞ்சமி அன்று நாக சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்தும், புற்றுக்கு மஞ்சள், குங்குமம், முட்டை, பால் ஆகியவை வைத்தும் வழிபடுவதை மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த ஆண்டு வரும் நாக பஞ்சமி ஆடி வெள்ளியுடன் இணைந்தே வருவதால் மிகவும் சிறப்புடைய நாளாக உள்ளது. இந்த நாளில் நாகங்களை வழிபட்டால் நாக தெய்வங்களின் அருளும், அம்பிகையின் அருளும் கிடைக்கும்.
வழக்கமாக ஆவணி மாதத்தில் வரும் நாக பஞ்சமி, இந்த ஆண்டு ஆடி மாதத்திலேயே வருகிறது. அதுவும் ஆடி நான்காவது வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 09ம் திகதி வருவதால் இது கூடுதல் சிறப்பு பெறுகிறது.
அம்மனை வழிபடும் போது ஆடி வெள்ளியில் அம்மனுக்கு குடையாக இருக்கும் நாகத்தையும் வழிபடுவது சிறப்பானதாகும். ஆகஸ்ட் மாதம் 09ம் திகதி நாள் முழுவதும் பஞ்சமி திதி உள்ளது. அதாவது ஆகஸ்ட் 08ம் திகதி இரவு 11.48 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 10ம் திகதி அதிகாலை 01.44 வரை பஞ்சமி திதி உள்ளது.
ஒரு கிராமத்தில் தீவிர சிவ பக்தையான பெண் ஒருத்தி, ஏழு அண்ணன்களுடன் வசித்து வந்தாள். ஒரு நாள் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தன்னுடைய அண்ணன்களுக்காக சாப்பாடு கொண்டு சென்றாள். அப்போது வாகனத்தில் ஒரு கருடன், பாம்பு ஒன்றினை காலில் இறுக பிடித்தபடி பறந்து கொண்டிருந்தது.
கருடனின் பிடியில் இருந்து தப்ப முடியாமல் நாகமும் தவித்துக் கொண்டு இருந்தது. கருடன் இறுக்கமாக பிடித்திருந்ததால் வலி தாங்க முடியாத நாகம், விஷத்தை கக்கியது.
அது அந்த பெண் கொண்டு சென்று உணவில் கலந்தது. அந்த சாப்பிட்ட உணவை சாப்பிட்ட அண்ணன் ஏழு பேரும் உயிரிழந்ததால் சிவனிடம் சென்று முறையிட்டாள் அப்பெண். அவளுக்கு காட்சி கொடுத்த சிவனும், பார்வதியும் நாக பஞ்சமி விரதம் இருக்க வழிகாட்டினார்கள்.
அவர்கள் கூறிய படியே அந்த பெண்ணும் விரதம் இருந்ததன் காரணமாக அவளுடைய ஏழு அண்ணன்களும் மீண்டும் உயிர் பெற்றதாக புராண கதைகள் சொல்லப்படுகிறது.
பகவான் கிருஷ்ணர், காலிங்கன் என்னும் பாம்புடன் சண்டையிட்டு வெற்றி பெற்ற நாளையே நாக பஞ்சமியாக நாம் கொண்டாடுவதாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் நாகங்களை வழிபடுவதால் நாகதோஷம், நாகங்களால் ஏற்படும் தீங்குகள், நாக பயம் போன்றவை நீங்கும் என்பது ஐதீகம்.