அழகை கெடுக்கும் கருவளையத்தால் கவலைப்படுறீங்களா? எளிய வீட்டு வைத்தியம் இதோ

கண்களை சுற்று ஏற்படும் கருவளையத்தில் நிரந்தர தீர்வு என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான இளம்பெண்களின் அழகை கருவளையம் குறைத்து விடுகின்றது. இதற்காக சிலர் ஏராளமான மருந்துகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் கருவளையத்தை எவ்வாறு சரிசெய்யலாம்? எதனால் ஏற்படுகின்றது? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கண்களை சுற்றி கருவளையம் ஏற்படுவதற்கு முதலாவது காரணமாக போதுமான தூக்கமின்மை காணப்படுகின்றது.
பின்பு நாம் எடுத்துக் கொள்ளும் தவறான உணவுப் பழக்கம், ஒழுங்கற்ற வழக்கம் இவற்றினை காரணமாக கூறலாம்.
மிகவும் முக்கியமான இளைஞர்கள் செய்யும் தவறு என்னவெனில் இரவில் தாமதமாக மொபைல், கணினி போன்ற திரைகளைப் பார்ப்பதாகும்.
மேலும் சோர்வு, மன அழுத்தம், உலர் கண்கள், கண் ஒவ்வாமை, நீரிழப்பு, உடலில் நீர் பற்றாக்குறை இவைகளும் முக்கிய காரணமாகவே இருக்கின்றது.
கண்களில் ஏற்படும் கருவளையங்களை நீக்க ரோஸ் வாட்டர் பெரிதும் உதவுகிறது. ரோஸ் வாட்டர் மற்றும் பால் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ளவும்.
பருத்தி பஞ்சின் உதவியுடன் கருவளையங்கள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கருவளையம் விரைவில் மறைந்துவிடும்.
இதே போன்று தேன், பால் மற்றும் எலுமிச்சையும் கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தினை நீக்க உதவியாகவே இருக்கும்.