ஒட்டுமொத்த தலைமுடி பிரச்சனைகளையும் போக்கும் இஞ்சி – எப்படி பயன்படுத்தலாம்?
பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் தங்களது முடியை அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக பெரும்பாலும் அனைத்து பெண்களும் தேவையான முயற்சிகளை எடுப்பார்கள்.
அந்தவகையில் அனைத்து பிரச்சினைக்கும் உதவும் வகையில் இருக்கும் ஒரே தீர்வு இஞ்சி. இஞ்சியை பயன்படுத்தி ஹேர் மாஸ்க் தயாரித்து உங்கள் தலைமுடியில் தடவினால் ஒட்டுமொத்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணலாம்.
தலைமுடிக்கு இஞ்சி பல நன்மைகளை கொடுக்கும் என்பதற்கு மாற்று கருத்து இல்லை. உங்களின் வார இறுதி நாட்களில் இந்த இஞ்சி ஹேர் மாஸ்கை ஒரு முறை செய்து பார்க்கலாம்.
3 டீஸ்பூன் இஞ்சி சாறு
1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
3 டீஸ்பூன் கிரீன் டீ
முதலில் இஞ்சிச் சாற்றை ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயுடன் கலக்கவும்.
பின் இஞ்சி சாற்றில் சேர்க்கும் முன் ஆலிவ் எண்ணெயை சூடாக்கவும்.
கிரீன் டீ தயாரானதும், ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் இஞ்சி சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய் கலவையில் இதை சேர்த்து கலக்கவும்.
முதலில் இந்த கலவையை விரல் நுனியின் தடவி, ச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்து, சுமார் 20 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.
அடுத்து 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் அல்லது லேசான ஷாம்பூவைக் கொண்டு முடியை சுத்தம் செய்யலாம்.
இந்த இஞ்சி ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறையாவது ஐந்து வாரங்களுக்கு நேராகப் பயன்படுத்தி வந்தால் உங்கள் தலை முடியில் நல்ல மாற்றத்தை காணலாம்.