ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை சாப்பிட வேண்டும் தெரியுமா?
![ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை சாப்பிட வேண்டும் தெரியுமா?](http://itamilnews.com/wp-content/uploads/2024/06/11.webp)
சுவையூட்டியான சர்க்கரை நம்முடைய அன்றாட வாழ்வில் சுவையை அதிகப்படுத்த பயன்படுத்தும் பொருளாகும். டீ, ஜூஸ், கேக், இனிப்புகள் என எந்தவொரு உணவிலும் சுவையை அதிகப்படுத்த நாம் சர்க்கரையை பயன்படுத்தி வருகிறோம்.
இது நம் மனதிற்கு இதமான உணர்வை கொடுத்தாலும், இதை அளவாக உண்ணாவிட்டால் உடலுக்கு பலவிதங்களில் கேடு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? தினமும் 20 முதல் 25 கிராம் அளவிற்கு மட்டுமே சாப்பிட வேண்டும்.
அதிகமாக சர்க்கரை உட்கொள்வதால் பல பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனாலாயே பலரும் சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அல்லது அளவாக சாப்பிட அறிவுறுத்துகிறார்கள். அதிகமாக சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளை இப்போது பார்ப்போம்.
அதிகப்படியாக சர்க்கரை எடுத்துக்கொள்வதால் உடலில் குளுக்கோஸ்-6 பாஸ்பேட் அதிகரிக்கிறது. இதயத்தில் உள்ள தசை புரதங்களின் மாறுதல்களுக்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது. இது இதய செயலிழப்பிற்கு வழிவகுக்கும்.
அதிகப்படியான குளுக்கோஸ் உட்கொள்வதால் செல்களும், மூளையும் சீக்கிரத்திலேயே வயதாவதாக 2009-ல் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.
சர்க்கரை அதிகமாக உட்கொள்ளும் போது உடலில் எண்டோர்பின் வெளியாவதால், நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது.
சர்க்கரை சாப்பிடுவதால் மலத்தில் பித்த அமிலம் அதிகரித்து பெருங்குடல் புற்றுநோய் மற்றும் பிற புற்றுநோய் வருவதற்கான கலவைகள் உருவாவதற்கு காரணமாக இருக்கிறது.
அடிக்கடி வெள்ளை சர்க்கரை சாப்பிட்டு வந்தால் திசுக்கள் தொய்வடைந்து அதன் செயல்பாடுகள் குறையும்.
அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வதால் கர்ப்ப காலத்தில் கருவின் தசை உற்பத்தியை பாதித்து, குழந்தை பிறந்து வளர்ந்த பிறகு உடற்பயிற்சி செய்யும் திறனை இழக்க வாய்ப்புள்ளது.
அடிக்கடி சர்க்கரை சாப்பிட்டு வருவது அல்புமின் மற்றும் லிபோபுரொட்டீன் என்ற இரண்டு ரத்த புரதங்களின் செயல்பாடுகளை பாதிக்கும். இதனால் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ராலை கையாள்வது சிரமமாக இருக்கும்.