போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
சுவாசக் கோளாறு சரி செய்யும் ஆயுர்வேத பானங்கள்
தற்போது நிகழும் மழை மற்றும் குளிர்காலத்தில் இருமல் மற்றும் சளி பிரச்சினை எல்லோரும் வந்த வண்ணமே இருக்கும். அவ்வாறு வரும் போது சிலருக்கு அது சுவாச மண்டலம் தொடர்பான பிரச்சினைகளை உண்டாக்கும் ஆபத்து அதிகம் இருக்கும்.
குறிப்பாக நுரையீரல் நன்கு ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமென்றால் அதற்கு நுரையீரலைப் பலப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.
மழைக்காலத்தில் ஏற்படும் சுவாச பிரச்சிணையை சரிசெய்து நுரையீரலை பலப்படுத்தி, சுவாச மண்டலத்தின் செயல்பாட்டையும் அதிகரிக்கச் செய்ய சில மூலிகைகளும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பானங்களும் நமக்கு உதவியாக இருக்கும்.
அவ்வாறு என்ன பானம் நமக்கு உதவும் என நாம் இங்கு பார்ப்போம்.
இஞ்சி டீயைக் குடிப்பதன் மூலம் நுரையீரலில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களைக் குறைக்க முடியும். இதிலுள்ள ஆன்டி – இன்ஃபிளமேட்டரி பண்புகள் நுரையீரலைப் பலப்படுத்தும். சுவாச மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதலி செய்யும்.
புதினா டீ தொண்டைக்கு இதமளிக்கும் ஒரு சூப்பர் பானம் என்று கூட சொல்லலாம். இந்த புதினாவில் உள்ள மெந்தால் பண்புகள் சுவாசப் பாதைக்கு புத்துணர்ச்சியைத் தரும். புதினா டீயைக் குடிப்பதன் மூலம் மார்பு மற்றும் சுவாசப் பாதையில் சேர்ந்திருக்கும் சளியைக் கரைத்து வெளியேற்றச் செய்யும் திறன் கொண்டது. இதனால் சுவாசப் பாதையும் சுத்தமாகும். நன்கு ஆழ்ந்த சுவாசத்தைப் பெற முடியும். அதேபோல நுரையீரல் செயல்திறனும் அதிகரிக்கும்.