பட்டலந்த விவகாரம் போன்று யாழ் நூலகம் தொடர்பிலும் விசாரணை வேண்டும்
நீங்கள் தினமும் காலை உணவை சாப்பிடாமல் இருக்கின்றீர்களா? என்னென்ன பிரச்சனை ஏற்படும் தெரியுமா?

இன்றைய நவீன காலகட்டத்தை பொருத்தவரையில் தொழிற்பட வளர்ச்சியுடன் ஓடிக்கொண்டு இருக்கையில் நாம் எல்லோரும் சாப்பிடுவதற்கான நேரத்தை ஒதுக்குவதையே மறந்து விட்டோம்.
அதிலும் உடல் ஆரோக்கியத்திற்கு காலை உணவு சாப்பிடுவது மிக முக்கியம் என்பதே நினைவில் இருக்காது. இவ்வாறு இருக்கையில், காலை உணவினை சாப்பிடாமல் தவிர்த்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.
பொதுவாக நாள்முழுவதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருப்பதற்கு காலை உணவு முக்கியமாக தேவைப்படுகின்றது.
காலையில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளைப் பொருத்தே அந்நாளில் செயல்கள் அனைத்தும் காணப்படுகின்றது. பொதுவாக காலையில் அரசனைப் போன்று சாப்பிடக்கூறுவார்கள்.
அதாவது இரவு முழுவதும் வயிற்றில் உணவு இல்லாமல் இருப்பதால், காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் சத்தாகவும், ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.
ஆனால் இன்று பெரும்பாலான நபர்கள் காலை சாப்பாட்டையே தவிர்த்து விடுகின்றனர். பரபரப்பான சூழ்நிலையில், வேலைக்கு செல்லும் அவசரத்தில் இந்த தவறினை நீங்கள் செய்தால் பாரிய பிரச்சனை ஏற்படும்.
காலை உணவை தவிர்க்கும் பொழுது, உடம்பிற்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் நாள் முழுவதும் சோர்வாக இருக்கும் நிலை ஏற்படும்.
மேலும் மூளைக்கு போதுமான குளுக்கோஸ் கிடைக்காததால் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படுவதுடன், எரிச்சல் மற்றும் மன அழுத்தமும் அதிகரிக்கும்.
சிலருக்கு காலை உணவை தவிர்ப்பதால் தலைவலி ஏற்படுவதுடன், வயிற்றுப் புண் மற்றும் செரிமான பிரச்சனையும் ஏற்படும்.
டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் அபாயம் அதிகரிப்பதுடன், தேவையான ஊட்டச்சத்துக்கள் உடம்பிற்கு கிடைக்காமல் இருக்கின்றது.
நாம் காலை உணவை தவிர்ப்பதால், மதியம் மற்றும் இரவு நேரத்தில் அதிகமான உணவை எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படும்.
இதனால் உடல் பருமன் அதிகரிக்கும். குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு காலை என்பது மிகவும் முக்கியமாகும். காலை உணவினை தவிர்ப்பதால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும்.