இலங்கையின் முக்கிய சுற்றுலா தலங்கள் தாக்கப்படலாம் ; அமெரிக்கா அவசர அறிவிப்பு
வீட்டில் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கா! இந்த 4 செடிகளை வளர்த்தால் போதும்
பொதுவாக எல்லோரத வீட்டிலும் கொசு தொல்லை அதிகமாக இருக்கும். நாம் தாவரங்கள் வளர்ப்பது வீட்டில் வளர்ப்பது அவசியம்.
கொசுத்தெல்லைக்கு வீட்டில் சில தாவரங்களை வளர்த்தால் அதற்கு முடிவு கட்டலாம். தற்போது வரும் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்களை விரட்ட இந்த செடிகளை வளர்க்க வேண்டும்.
இந்த தாவரங்கள் வீட்டில் வளர்ப்பதால் கொசுக்களுக்கு இது எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கும். அந்த தாவரங்கள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
எலுமிச்சை புல் செடி: இந்த செடியில் இருந்து ஒரு மென்மையான வாசம் வரும் இது கொசுக்களுக்கு எதிர்பதமாக அமையும். அனால் இதன் வாசனை நம்மை புதுமையாக உணர முடியும்.
லெமன் புல் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது. கொசுக்களுக்கு அவற்றின் வாசனை பிடிக்காது. இதனால் கொசுக்கள் எலுமிச்சை புல்லை விட்டு ஓடுகின்றன. இதனால் இதனை வீட்டில் வளர்க்கலாம்.
சாமந்தி செடி: சாமந்தி செடி ஒன்றை வீட்டில் நட்டு வளர்த்தாலும் சாமந்தி பூக்கள் அதிகமாக பூக்கும். இந்த செடியை பால்கனியில் வைத்தால் அழகை அதிகரிக்கும். சாமந்தி செடியை வாங்கி வீட்டில் வளர்த்தால் சாமந்தி செடிகளின் வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது.
இதனால் கொசுக்களுக்கு ஒவ்வாமை ஏற்படும். இதன் காரணமாக உங்கள் வீட்டை சுற்றி கொசுக்கள் மட்டுமின்றி பல சிறு பூச்சிகளும் வராது.
லாவெண்டர் செடி: லாவெண்டர் செடி மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் நறுமணத்தை வெளியிடும் செடியாகும். இந்த செடியின் வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது. இந்த வாசனை கலந்த காற்றை கொசுக்கள் சுவாசித்தால் அதற்கு மயக்கம் வரும். இதன் காரணமாக இந்த செடி இருக்கும் பக்கமே கொசு வராது.
இது வீட்டில் மட்டுமல்ல பல கொசு விரட்டும் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு லாவெண்டர் செடியை வளர்க்கலாம். இதனால் கொசுக்கள் வீட்டை சுற்றி மற்றிலும் இல்லாமல் போய் விடும்.
புதினா செடி:பொதுவாக புதினா உணவுக்கு நல்ல சுவையைத் தரும் இலையாகும். இதன் வாசனை மற்ற தாவரங்களை போல் இல்லாமல் ஒரு புத்தணர்ச்சி கொடுக்கும் வாசனையாக இருக்கும்.
இந்த வாசனை மனிதர்களுக்கு பிடிக்கும். இதை வீட்டில் வளர்ப்பது கொசுத்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் ஆரோக்கியத்தையும் தரும். இந்த புதினா வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது. நீங்கள் உங்கள் வீட்டில் புதினா வாசனை வந்தால் கொசுக்கள் அங்கு தங்க விரும்பாது.