நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க திகதி அறிவிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளுக்கான திகதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று (04.10.2024) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்வைத்து தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன் பிரகாரம் எதிர்வரும் 27ம் திகதி பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகப் பணியை முன்னெடுக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நாடெங்கும் உள்ள 22 மாவட்டங்களில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்றைய தினம் தங்கள் வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் தங்கள் பிரதேச தபால் நிலையங்களுக்கு நேரில் சமூகமளித்து தங்களுக்கான வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.