போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
அரண்மனை 4 ஐந்து நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கடந்த வாரம் வெளிவந்து மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் அரண்மனை 4 சுந்தர் சி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் தமன்னா, ராஷி கன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வழக்கமான பழிவாங்கும் கதைக்களத்தை தவிர்த்து சற்று வித்தியசமான கதைக்களத்தை சுவாரஸ்யமான திரைக்கதையில் கூறியிருந்தார் சுந்தர் சி. அதுவே இப்படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணமாக அமைந்தது.
முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூலில் பட்டையை கிளப்பி வரும் நிலையில், கடந்த ஐந்து நாட்களில் அரண்மனை 4 செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, உலகளவில் கடந்த ஐந்து நாட்களில் இப்படம் ரூ. 33 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக இப்படம் ரூ. 50 கோடியை தொடும் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.