ஒரு வாரம் தான் கோட் நல்லா போச்சு.. வேதனையில் திரையரங்க உரிமையாளர்கள்
தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கோட். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.
இப்படம் இதுவரை ரூ. 400 கோடியை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் ரூ. 200 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளதாம்.
இந்த நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ள விஷயம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கோட் திரைப்படம் முதல் ஒரு வாரம் மட்டும் தான் நன்றாக ஓடியது. முதல் வாரமே விநியோகஸ்தருக்கு 80% சதவீதம் கொடுக்கப்பட்டது. இது மிகவும் பயங்கரமான சூழல் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் பேசியுள்ளார்.