லோகேஷ் கவனமாக இருந்திக்க வேண்டுமா, ரஜினி உடல்நிலை விஷயத்தில் பத்திரிகையாளர் சொன்ன பகீர் தகவல்
கடந்த 2 நாட்களாக இணையமே அதிர்ச்சியில் உறைந்து இருப்பது ரஜினி உடல்நிலை குறித்த தகவலால் தான். அவருக்கு அடி வயிறு சற்று வீங்கி இருப்பதாக தெரிந்து உடனே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவர் உடல்நிலை குறித்து பல தகவல்கள் வந்தாலும், வயிறு பகுதியில் ஒரு ஸ்டண்ட் வைத்தனர், அதன் பிறகு அவர் நன்றாக உள்ளார் என்ற தகவலும் வெளிவந்தது.
இந்த நிலையில் பத்திரிகையாளர் அந்தனன் தன் சேனலில், லோகேஷ் சமீபத்தில் மழையில் ஒரு சண்டைக்காட்சி எடுத்தார். அங்கு தான் ரஜினிக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டது.
அதை தொடர்ந்து சுடு தண்ணீரில் தான் அந்த காட்சிகள் எடுக்கப்பட்டது என கூறினார், கண்டிப்பாக லோகேஷ் ஒரு மூத்த ஹீரோவை கையாளுவதில் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று அந்தனன் கூறியுள்ளார்.