விவாகரத்து பெற்று பிரிந்த பிரபல சீரியல் நட்சத்திர ஜோடி… ரசிகர்கள் ஷாக்
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் கொண்டாடிய நிறைய நட்சத்திர ஜோடிகள் உள்ளார்கள். அதில் நிஜ வாழ்க்கையில் இணைந்த ஜோடிகளும் இருக்கிறார்கள்.
கடந்த 2016ம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் ஈஸ்வர்கும், சின்னத்திரை சீரியல் நடிகை ஜெயஸ்ரீக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரேவதி என்ற பெண் குழந்தையும் உள்ளது. அவரும் இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
இவர்களுக்கு திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே பிரச்சனையும் தொடங்கியிருக்கிறது. ஈஸ்வருக்கு, மகாலட்சுமியுடன் தொடர்பு இருக்கிறது என ஜெயஸ்ரீ தனது கணவர் மீது புகார் அளித்திருந்தார்.
அப்போது இந்த பிரச்சனை சின்னத்திரையில் பரபரப்பா பேசப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக இவர்களின் விவாகரத்து வழக்கு இழுபறியை சந்தித்து வந்த நிலையில் சுமார் 5 வருட போராட்டத்துக்கு பின்னர் தனக்கும் ஜெயஸ்ரீக்கும் விவாகரத்து கிடைத்துவிட்டதாக நடிகர் ஈஸ்வர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்