நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
அம்பாறை உலுக்கிய சம்பவம்… கைதான அதிபர், ஆசிரியருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
அம்பாறையில் உள்ள காரைத்தீவில் மாவடிபள்ளி பாலத்திற்கு அருகில் உழவு வண்டி ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான 4 பேரில் இருவர் விளக்கமறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான கைதான மதரஸா பாடசாலையின் அதிபர், ஆசிரியர் உள்ளிட்ட 4 பேர் நேற்றையதினம் சம்மாந்துறை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, மதரஸா பாடசாலையின் அதிபரையும், ஆசிரியரையும் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஏனைய இருவரையும் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.