நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
இந்த மணமகன் வேண்டாம்… திருமணத்தை நிறுத்திய மணமகள் வெளியிட்ட அதிர்ச்சி காரணம்!
இந்தியாவில் உள்ள பகுதியொன்றில் மணமகன் தன்னைவிடக் குறைவாகப் படித்துள்ளதாகக் கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த நவம்பர் 17 ஆம் திகதி 28 வயது பெண்ணுக்கும், 30 வயது இளைஞருக்குத் திருமணம் நடைபெற இருந்தது.
ஆனால் இறுதி நேரத்தில் அந்த இளைஞரைத் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று மணப்பெண் மறுத்துள்ளார்.
மணமகள் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில், மணமகன் 10ஆம் வகுப்பு தோல்வியடைந்துள்ளார்.
இதை காரணம் காட்டி 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மணமகனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று மணப்பெண் தெரிவித்துள்ளார்.
மேலும், திருமணம் பாதியில் நின்றதால் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை மணப்பெண் குடும்பத்தினரிடம் மணமகன் குடும்பத்தினர் திரும்ப ஒப்படைத்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.