இலங்கையில் இந்திய பல்கலை மாணவன் திடீர் மரணம்

கண்டியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இந்திய பல்கலைக்கழக மாணவர்கள் குழுவில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்திய பல்கலைக்கழக மாணவர்கள் குழுவிலுள்ள மாணவர் ஒருவர் நீச்சல் தடாகத்தில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெனிக்ஹின்ன, குண்டசாலை, தம்பராவ பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 26 வயதான சந்தோஷ் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர், இந்திய பல்கலைக்கழக மாணவர் ஆவார்.
பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் அடங்கிய கொண்ட குழு ஒன்று கடந்த 16 ஆம் திகதியிலிருந்து விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.
இந் நிலையில் மாணவர்கள் குழு இன்று (18) அதிகாலை நீச்சல் தடாகத்தில் நீராடியுள்ளனர். இதன் போது பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீச்சல் குளத்தில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.