அத்தை வீட்டில் கொள்ளை; பொலிஸ் அதிரடியில் சிக்கிய நபர்
இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் இசுரு உதானவின் அத்தையின் ஹோமாகம ரயில் நிலைய வீதியிலுள்ள 3 மாடி வீட்டில் அண்மையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையன் கூரிய ஆயுதத்தால் இசுரு உதானவின் அத்தையை தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
மேலும் 72 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் இதன்போது கொள்ளையடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 4 மாதங்களின் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸாரால் கைது செய்ய முடிந்துள்ளது.