போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இன்று ஆரம்பமாகவுள்ள யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றம்
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.
இந்தப் பெருந்திருவிழாவில் எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் 4.45 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 26ஆம் திகதி மாலை 4.45 மணிக்கு கார்த்திகை திருவிழாவும், மறுநாள் 27ஆம் திகதி காலை 6.45 மணிக்கு சூர்யோற்சவமும் நடைபெறவுள்ளன.
தொடர்ந்து 23ஆம் திருவிழாவான எதிர்வரும் 31ஆம் திகதி பிற்பகல் 4.45 மணிக்கு சப்பரத் திருவிழாவும், செப்டெம்பர் முதலாம் திகதி காலை 6.15 மணிக்கு தேர்த்திருவிழாவும், அடுத்தநாள் செப்டெம்பர் 2ஆம் திகதி காலை 6. 15 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.