தோழியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு: 12ஆம் வகுப்பு மாணவி பள்ளி வளாகத்தில் தற்கொலை
இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்: மகனை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய இளம் தாய்!
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் தமது மகனை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு, தாக்கியதாகக் கூறப்படும் தாய் ஒருவரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் 7 வயதுடைய தமது மகன் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, 35 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவனை சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரை (29-05-2024) இன்று ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், குறித்த காணொளியில் மற்றுமொறு பெண், இரண்டரை வயது சிறுவன் ஒருவரை சித்திரவதைக்கு உள்ளாக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.
அது தொடர்பிலும் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.