எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்ற இரு மீனவர்களுக்கு நேர்ந்த நிலை!

இலங்கையில் கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்களை காணவில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தென்மேற்குப் பருவமழை காரணமாக இலங்கை மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையையும் மீறி குறித்த மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த சில தினங்களாக அதிக காற்று வீசி வருவதைக் கருத்தில் கொண்டு இன்றும் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.