போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கிளிநொச்சியில் நள்ளிரவு இடம்பெற்ற சம்பவம்; தெய்வாதீனமாக தப்பிய நபர்
கிளிநொச்சி நகரத்தின் இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை ஒரு மணியளவில் பாரிய வேப்பமரம் ஒன்று விழுந்ததில் நபர் ஒருவர் தெய்வாதீனமாக உயிர்பிழைத்துள்ளார்.
வேப்பமரம் விழுந்ததில் வர்த்தக நிலையம் ஒன்று உட்பட இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளதுடன், கடையில் உறங்கிக் கொண்டிருந்தவர் காயங்களுக்கு உள்ளாகி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
ஏ-09 வீதியின் புனித திரேசம்மாள் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வர்த்தக நிலையத்துக்கு அருகில் நின்ற பாரிய வேப்பமரமே இவ்வாறு விழுந்துள்ளது.
இதன்போது, கடையில் உறங்கிக் கொண்டிருந்தவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகி தெய்வாதீனமாக உயிர் தப்பிய நிலையில், கடையின் கூரைகள் சேதமடைந்துள்ளது.