48 மணித்தியாலங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடனுதவி தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் கட்ட கடனுதவி அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப் பெறும் என துறைமுகங்கள் கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (18.11.2023) ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துடன் அபிவிருத்தி திட்டங்களுக்கான கடனுதவிகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் வெட் வரி அமுல்படுத்தப்பட்டாலும் அதனூடாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் துறைமுகங்கள் கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாரியளவில் குறித்த வரி அதிகரிக்கப்படவில்லை எனவும் 03 சதவீதத்தால் மாத்திரமே வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஈடு செய்வதற்காகவே அரச பணியாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.