சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(A D Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பகுதியில் வைத்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், விடைத்தாள் திருத்துபவர்களுக்கான கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தற்போதுள்ள அனைத்து ஆசிரியர் வெற்றிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.