போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
தாயார் வெளிநாட்டில்… 9 வயது மகனுக்கு தந்தையால் நேர்ந்த கொடுமை
தனது 9 வயது மகனின் முகத்தில் சூடு வைத்த தந்தையை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காலி, தொடங்கொட பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தாயால் ஓமானில் வேலைக்கு சென்றுள்ள நிலையில் குறித்த சிறுவன் தனது தந்தை, பாட்டி, தாத்தா ஆகியோருடன் தெபுவன, பரமுல்லகொட பிரதேசத்தில் வசிப்பதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 3ஆம் திகதி மாலை அளுத்ஹேன பிரதேசத்தில் விளையாடச் சென்ற சிறுவன் வீட்டுக்கு வந்த போது, குடிபோதையில் இருந்த தந்தை, சிறுவனை திட்டியுள்ளார்.
அதையடுத்து மகனும் தந்தையை திட்டியதால், ஆத்திரமடைந்த தந்தை மகனின் முகத்தில் சூடு வைத்துள்ளார். தந்தையின் கொடூர செயலால் மகனின் கன்னத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தொடங்கொட பிரதேச செயலகம் விடுத்துள்ள அறிவித்தலின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.