போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நாமலின் செயலை பைத்தியக்காரதனம் என சாடும் மகிந்த
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவை நியமிப்பது கட்சிக்கோ அல்லது கீழ்மட்ட மக்களுக்கோ நன்மை பயக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கும் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலுக்கும் நாமல் ராஜபக்சவே காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவை விட ராஜபக்ச குடுபத்தை சேர்ந்த நாமல் மீது மக்கள் கோபமாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளனர்.
சஜித் பிரேமதாசவுடன் பொதுஜன பெரமுனவின் குறிப்பிட்ட குழுவினர் செய்து கொண்ட ஒப்பந்தமாகவே இதனைப் பார்க்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்த போது நாமல் பைத்தியக்காரன் என கூறினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.