உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நுவரெலியாவில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை

நானே ஆரம்பம் வெல்வோம் இலங்கை, எனும் தொனிப்பொருளின் கீழ் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சி ஏற்பாட்டில் நடமாடும் சேவை ஒன்று இடம்பெற்று வருகிறது .
குறித்த நடமாடும் சேவை இன்றும் நாளையும் நுவரெலியா மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara), முன்னாள், சீ.பி ரட்நாயக்க(Chandrasiri Bandara Ratnayake) , எஸ்.பி. திஸாநாயக்க(S. B. Dissanayake) , நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்(Jeevan Thondaman) , வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் , நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர் , உதவி செயலாளர், பொலிஸ் அத்தியட்சகர்கள் , முன்னாள் மாநகர சபை முதல்வர்கள் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், தெளிவூட்டல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை பொறுப்பேற்றல், தொழில் வங்கியில் பதிவு செய்தல் விவசாயம் மற்றும் கட்டுமானத்துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கு பதிவு செய்தல் உள்ளிட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்புகளோடு மேலும் பல சேவைகளை பற்றி கலந்துரையாடப்பட்டடுள்ளது.
மேலும் தொழில் வங்கியில் பதிவு செய்தல், தொழில்வாய்ப்புகள், சட்டம் தொடர்பான விழிப்புணர்வு, வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல் போன்ற பல சேவைகள் நடமாடும் சேவையூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர் .
ருமேனியா, மத்திய கிழக்கு நாடுகள், இஸ்ரேல், ஐரோப்பா நாடுகளில் தொழில் ஒன்றை பெற்றுக் கொள்வது தொடர்பாக 40இற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட முகவர் நிறுவனங்களால் தெளிவூட்டல்களும் வழங்கி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.