போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
பிரபல பாடசாலை அதிபரால் மாணவிகள் வன்புனர்வு; வெளியான பகீர் தகவல்!
நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி பாடசாலை அதிபரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் 6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியொருவரே பாதிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த அதிபர் இந்த மாணவியைப் பல முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை அப் பாடசாலையில் கல்வி கற்கும் பல மாணவிகள் சந்தேக நபரான அதிபரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு பாடசாலையை விட்டு விலகிச் சென்றுள்ளதாக இந்த முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.