பிரான்ஸில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் மரணம்! இறுதி கிரியை நிகழ்வு அறிவிப்பு
விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், புலனாய்வுத்துறையின் மேலாளர்களில் ஒருவருமான விநாயகம் என அழைக்கப்படும் கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி பிரான்ஸில் மரணமடைந்துள்ளார்.
கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி அவர்களின் அஞ்சலி நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை (20.06.2024) காலை 10:00 மணி தொடக்கம் பிற்பகல் 14:00 மணி வரை 30 route de Groslay 95200 Sarcelles என்னும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பின்னர் பிற்பகல் 15:00 மணி தொடக்கம் பிற்பகல் 16:00 மணி வரை 164 avenue jean jaurès 93500 Pantin – FRANCE எனும் முகவரியில் அவரின் பூத உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு நிகழ்வு ஏற்பாட்டுக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.