போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
பெட்ரோலியம் உள்ளிட்ட இரு துறைகள் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்
மின்சார விநியோகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விநியோகம் என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.குறித்த அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.