நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மரணத்தை ஏற்படுத்தும் வீதியாக மாறிய யாழ். ஏ-9 வீதி
யாழ்ப்பாணம் அரியாலை சந்தி, ஏ-9 வீதியில் நீண்ட தூரத்துக்கு மண் கொட்டப்பட்டு காணப்படுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்தின் மத்தியிலும் பயத்தின் மத்தியிலும் பயணத்தை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவில் குறித்த வீதியில் மண் கொட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மண் கடத்தல்காரர்களை பொலிஸார் துரத்தியவேளை அவர்கள் வீதியில் மண்ணை கொட்டிவிட்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த வீதியில் வளைவு காணப்படுவதுடன் அந்த வளைவில் ஏற்கனவே விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் கொட்டப்பட்டுள்ள மண்ணினால் மேலும் விபத்துக்குகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன என்பதுடன் இதனால் மரணம் கூட சம்பவிக்கக்கூடும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த மண்ணை அகற்றுவதற்கு நல்லூர் பிரதேச சபையோ அல்லது வீதி அபிவிருத்தி அதிகாரசபையோ இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
எனவே குறித்த மண்ணை வீதியில் இருந்து அகற்றி பாதுகாப்பான போக்குவரத்துக்கு வழிசமைக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.