ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
மாணவனுக்கு நேர்ந்த சோகம்!

பசறை – மெதவலகம பகுதியில் 27 அடி உயரமுடைய வீடொன்றின் மேல் பகுதியிலிருந்து தவறி வீழ்ந்து மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் 22.05.2023 அன்று இரவு இடம்பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். பசறை தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த மாணவர் நண்பர்களுடன் இணைந்து கற்பதற்காக மெதவலகம பகுதியில் வசிக்கும் தனது நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் 22.05.2023 அன்று இரவு புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டின் மேல் பகுதிக்கு சென்ற வேளையிலேயே தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.
இதன்போது சிகிச்சைகளுக்காக பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த மாணவர் கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.