போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
முருங்கைக்காய்க்கு உரிய விலை இன்மையால் அவதிப்படும் உற்பத்தியாளர்கள்
முருங்கைக்காய்க்கு உரிய விலை இன்மையால் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு, மயில்வானபுரம் பகுதியில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் தமது வாழ்வாதாரமாக முருங்கைச் செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்பொழுது 40 ரூபாய் 50 ரூபாய்க்கும் என கொள்ளளவு செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது முருங்கை செய்கையின் அநேகமான விவசாயிகள் முருங்கைக்காய் அறுவடையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் முருங்கைக்காய்க்கு உரிய விலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடமும் இதே போன்று முருங்கை செய்கையாளர்கள் பெரும் பாதிப்பை ஏதிர்கொண்டதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
குரங்கு, யானை உள்ளிட்டவற்றுக்கு இரவு பகலாக காவலிருந்து பாடுபட்டு எந்தப்பயனுமற்றுப்போயுள்ளதாவும், இவரிடமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அறுவடைக்கு தயாராக உள்ள முருங்கையினை அறுவடை செய்ய முடியாது கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
அறுவடை செய்யும் பொழுது அதற்கான கூலி பணத்தை கூட பெற முடியாத நிலையில் விலை காணப்படுவதாக முருங்கைச் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.