கனடிய பொதுத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி உள்பட மூன்று தமிழர்கள் வெற்றி!
யாழில் இளைஞன் ஒருவரை கொடூரமாக தாக்கிய வன்முறை கும்பல்… வெளியான பின்னணி!

யாழ்ப்பாணம் – மருதனார் மடத்தில் வெற்றிலை வியாபாரம் செய்துவந்த 29 வயது இளைஞர் ஒருவர் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது.
இச்சம்பவம் (26-07-2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் யாழ்ப்பாணம் போதுனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த இளைஞர் வியாபாரத்தினை முடித்து விட்டு வீட்டுக்கு செல்கின்ற வேளையிலேயே இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் 4 பேரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்து இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை விளக்குமறியலில் வைக்குமாறு நீதிமான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் முன்பகை காரணமாக இடம் பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.