நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
யாழில் உள்ள காதலியை பார்க்க வந்த கிளிநொச்சி இளைஞனுக்கு நேர்ந்த நிலை!
கிளிநொச்சி சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழில் உள்ள காதலியை பார்க்க வந்த நிலையில் வன்முறை கும்பல் ஒன்றினால் வாள்வெட்டுக்கு இலக்கான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் (26-07-2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளைஞர் இன்று யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதிக்கு வந்த வேளை காலை 11 மணியளவில் வன்முறை கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட இளைஞர் மாலை வேளை வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் மானிப்பாய் ஆலடிப்பகுதியில் வீசப்பட்டுள்ளார்.
அவரை மீட்ட பொலிஸார் யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.