யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரால் அதிரடி கைது! சிக்கிய பொருட்கள்

யாழ். ஊர்காவற்றுறை பகுதியில் பசுமாட்டை இறைச்சிக்காக வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் வெட்டுவதற்கு தயாராக இருந்த காளை மாடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (19-07-2024) ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனையில் இடம்பெற்றுள்ளது.
அண்மை காலமாக ஊர்காவற்றுறை உட்பட தீவகத்தின் பல இடங்களிலும் அனுமதி அற்ற முறையில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுதல் மற்றும் மாடுகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக பசு மாடுகள் இறைச்சிக்காக வெட்டும் பாதகச் செயலும் அரங்கேறி வருகின்றது.இவ்வாறான நிலையிலேயே இன்றைய தினம் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி த.சுசிதரன் தலைமையிலான குழுவினர் மேற்படி மாடு வெட்டியவரைக் கைது செய்துள்ளனர். அனுமதியின்றி மாடு வெட்டுவதாக சுகாதார க்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து வைத்திய அதிகாரி இத்தகவலை ஊர்காவற்றை தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தெரிவித்து பொலிஸாரின் உதவியைக் கோரியுள்ளார்.