யாழ் நூலகத்தின் கதை என்னும் ஆவணப்படத்தின் திரையிடல்!

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (29-05-2024) “எரியும் நினைவுகள்” யாழ்பாண நூலகத்தின் கதை என்னும் ஆவணப்படத்தின் திரையிடலும் கலந்துரையாடலும் இடம் பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு ஆவணப்பட இயக்குனர் எஸ்.சோமிதரன் தலைமையில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இன்று மாலை திரையிடல் நிகழ்வும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் ஆவணப்பட இயக்குனர் எஸ் சோமிதரன், சிவகுரு ஆதீன குருமுதல்வர்வேலன் சுவாமிகள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன், சிவில் சமூகத்தினர் மற்றும் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆவணப்படத் திரையிடலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் ஆவணப்படம் சார்ந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வுக்கு தமிழ் சிவில் சமூக அமையம் அனுசரணை வழங்கியிருந்தது.