விளையாட்டுத் துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை!
தேசிய விளையாட்டுத் துறை அமைச்சுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பணம் விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை காட்டும் செலவின் சுருக்கத்தை விளையாட்டு அமைச்சு நேற்று (13.11.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.
அதன்படி, விளையாட்டுத்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டதுடன், தேசிய விளையாட்டு நிதியத்திற்கு கிரிக்கெட் நிறுவனத்தால் கிடைத்த 2900 இலட்சம் ரூபாய் எப்படி செலவிடப்பட்டது என்பதை காட்டும் செலவுகளின் சுருக்கம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் தேசிய விளையாட்டு நிதியத்திற்கு 28 கோடியே 99 இலட்சத்து தொண்ணூறு ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 25 கோடியே 73 இலட்சத்து 49,179 ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விளையாட்டு நிதியத்தில் உள்ள நிதிக்கு மேலதிகமாக 03 கோடியே 26 லட்சத்து 40,821 ரூபாய் மிகுதியாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.