நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
ஸ்ரீலங்கன் விமானச்சேவையை விற்பனை செய்யும் திட்டம் ரத்து
மூன்று சாத்தியமான கொள்வனவாளர்களை பட்டியலிட்ட போதிலும், கடன் சுமைக்கு உட்பட்டுள்ள அதன் தேசிய விமான சேவையை விற்கும் திட்டத்தை இலங்கை ரத்து செய்துள்ளது என்று அரசாங்கத்தின் தனியார் மயமாக்கல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நாட்டிற்கு பிணை எடுப்பு கடனை வழங்கும் போது சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய கோரிக்கையான ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸை (SriLankan Airlines) விற்பனை செய்வதற்கு, கடந்த செப்டம்பர் மாதம் ஏலத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனையடுத்து 2022- 2023 நிதியாண்டின் இறுதியில் 2.0 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை கடனாகக் கொண்டிருந்த, விமான நிறுவனத்தில் பங்குகளை எடுக்க ஆறு நிறுவனங்கள் ஆரம்பத்தில் விருப்பம் தெரிவித்தன.
இந்தநிலையில், மலேசியாவின் ஏர் ஏசியா உட்பட மூன்று சாத்தியமான முதலீட்டாளர்களின் குறுகிய பட்டியலை அரசாங்கம் ஏப்ரல் மாதம் அறிவித்தது.
இருப்பினும், நேற்று வெள்ளிக்கிழமை, அரசுக்கு சொந்தமான நிறுவன மறுசீரமைப்பு பிரிவு விற்பனையை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் இதற்கான காரணம் வெளியிடப்படவில்லை.