உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகிறார் ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (ஏப்ரல் 28) காலை 9.30 மணியளவில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார்.
இம்முறை அவர், தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கிணங்க வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டிருந்தார்.
சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாண முதலமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிமுறைகேடுகள் தொடர்பாக இந்த விசாரணை இடம்பெற்று வருகிறது.
இதற்கான முன்னைய அழைப்பு ஏப்ரல் 17ஆம் திகதியன்று விடுக்கப்பட்டிருந்த போதிலும், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையாக முடியாது என்று தெரிவித்திருந்தார். அதையடுத்து, இன்று (28) அவருக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த விசாரணை, இலங்கை அரசியலில் இலஞ்ச ஊழல் விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்து வருவதைத் தெள்ளிப் படுத்துகிறது.