உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த 24 மணி நேரத்துக்குள் நாடு முழுவதும் சுமார் 50,000 மின்சார தடைகள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இது குறித்து மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக்க விமலரத்ன இன்று (30) தெரிவித்ததாவது:
முந்தைய தினமான 29ஆம் திகதி இரவு 8:00 மணியிலிருந்து இன்று (30) இரவு 8:00 மணி வரையிலான காலப்பகுதியில் குறித்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதுவரை 14,030 முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள மின்தடைகளை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிகளவிலான மின்தடை முறைப்பாடுகள் மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் இருந்து வந்துள்ளன.
-
மத்திய மாகாணத்தில் பதிவாகிய 15,000 முறைப்பாடுகளுள் 5,300 இற்கும்,
-
மேல் மாகாணத்தில் பதிவாகிய 10,000 முறைப்பாடுகளுள் 1,700 இற்கும் இதுவரை தீர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மின் ஒழுக்கம் சீராகாத பகுதிகள் தொடர்பாக, மின்கம்பிகள் முறிந்து விழுதல், மின் இணைப்புகள் துண்டித்தல் போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டால், பொதுமக்கள் CEB 1987 அழைப்பு இலக்கம் அல்லது CEB Care கைப்பேசி செயலியின் மூலமாக முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், மின்சார விநியோகம் 24 மணி நேரத்திற்குள் சீராக்கப்படும் எனவும், எச்சரிக்கையுடன் மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும் எனவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.