உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் விடுத்துள்ள வேண்டுகோள்!

புனித தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்கள், பொலிதீன் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகாத பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு, “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டம் சார்பாக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இத்துடன், தலதா மாளிகை சுற்றுவட்டாரத்தை சுத்தமாக வைத்திருக்க, குப்பைகளை உரிய இடங்களில் மட்டும் விட்டு, ஒவ்வொருவரும் சமூகப்பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த திட்டம் நினைவுகூர்ந்துள்ளது.
அரசாங்கத்தின் பிரதான சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை சார்ந்த விழிப்புணர்வு முயற்சியாக “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டம் செயல்படுகிறது. நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாப்பது, தூய்மையான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பது, மற்றும் சுகாதாரமான சமூகத்தை உருவாக்குவது இதன் முக்கிய நோக்கமாகும்.
தற்போது நடைபெறும் ஸ்ரீ தலதா மாளிகை கண்காட்சியுடன் இணைந்து, அந்தப் புனிதத்தலத்தை மையமாகக் கொண்டு பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் பக்தர்களுக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் பங்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.